சாலட் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.



ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றைப் பெறலாம்.



இவற்றில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கின்றன;



கலோரி குறைவாக இருக்கிறது. வயிற்றை வேகமாக நிரப்பி, அடிக்கடி பசியெடுக்கும் உணர்வைத் தடுப்பதால் உடல் எடை எளிதில் அதிகரிக்காது.



மோனோ அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட்’ எனப்படும் நல்ல கொழுப்பு உடலுக்குக் கிடைக்கும்.



வெறும் சாலட்டை மட்டுமே உணவாகச் சாப்பிடுபவர்கள் முட்டை, பனீர், மீன், விதைகள், கோழி இறைச்சி, நட்ஸ், யோகர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் கூடுதலாகச் சேர்த்து சாலட் தயாரிக்கலாம்.



. இதனால் உடலுக்குத் தேவையான புரதச்சத்துகள் போதிய அளவில் கிடைக்கும்.



தினமும் இந்தக் கலவையைச் சாப்பிடுபவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.



பழ சாலட் மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலின் பளபளப்பைக் கூட்டும். கொலஸ்ட்ரால் பிரச்னையிலிருந்து விடுவிக்கும்.



முதுமையைத் தள்ளிப்போடும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், முதியோரும் இரவு உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.