கோடைக்காலம் வந்தாலே தர்பூசணி கிடைக்கும் என்று குஷியாகிவிடும் மனம்.
இதில் லைக்கோபீன் (Lycopene) என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது.
ஃப்ரீ ராடிகல்ஸால் உண்டாகும் தீமைகளைக் குறைக்கும்; இதயத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது.
இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும்.
லைக்கோபீன் (Lycopene) மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.
தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன் (Lutein), சியாக்ஸன்தின் (zeaxanthin) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன.
இவை மாலைக்கண்நோய், கண்விழி மிகை அழுத்த நோய் (Glaucoma) போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கும்.
சிறுநீரகத்துக்குச் சிரமம் கொடுக்காமல் திரவக் கழிவுகளை வெளியேற்ற இது உதவும். அமோனியாவை , கல்லீரலில் இருந்து வெளியேற்ற இது உதவும். ஒரு டேபிள்ஸ்பூன் விதைகளை அரைத்து அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்ற வேண்டும். சூடு ஆறியதும் இதைக் குடிக்கலாம்.