மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய விசயங்கள்!
புன்னகை மூளையில் டோபமைனை அதிகரிக்க உதவுகிறது. டோபமைன் என்பது மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன். பொய்யான சிரிப்பு இருக்க வேண்டும் என்பதில்லை. என்ன உணர்கிறீர்கள் என்பது புன்னகையுடன் கவனிக்க வேண்டும்.
உடற்பயிற்சி உங்கள் உடலுக்கு மட்டுமல்ல. வழக்கமான உடற்பயிற்சி மன அழுத்தம், பதட்ட உணர்வுகள் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியும் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
5 நிமிட ஸ்ட்ரெச்சுடன் உங்கள் அன்றாட வேலைகளைத் தொடங்குங்கள். 10 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு போதுமான அளவு ஓய்வும் அவசியம். தூக்கம் மிகவும் அவசியம்.
இரவு நேரத்தில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் உங்கள் மனச்சோர்வு, இதயபாதிப்பு, உடல்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் போக்கும்.
No சொல்ல பழகுவது அவசியம். 'இல்லை, முடியாது' என்று சொல்லக் கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக உணர்வதற்கான வழி. அதிக நேரம் ஸ்மாட்ஃபோன், டிவி, சமூக வலைதளம் என செலவிடுவதை தவிர்க்கவும்.
இயற்கையை ரசிப்பது, காற்றோட்டமான பூங்காவில் நடப்பது, வேடிக்கை பார்ப்பது, நன்றியுணர்வை நினைப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.