தர்பூசணியில் கலப்படம் கண்டறிவது எப்படி?
தர்பூசணியில் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா?
இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI), கலப்படம் செய்யப்பட்ட அல்லது போலியான தர்பூசணிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.
தர்பூசணியை பாதியாக வெட்டி, பழத்தின் மீது பருத்தி துண்டை தேய்க்கவும். கலப்படம் செய்யப்பட்டு இருந்தால், பருத்தி துண்டு சிவப்பு நிறமாக மாறும்.தர்பூசணியில் எரித்ரோசின் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம்.
எரித்ரோசைன் எனப்படும் ஆபத்தான செயற்கை நிறமூட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், குழந்தை பருவத்தில் பிள்ளைகளின் நடவடிக்கையில் மாற்றம்..
மற்றும் தைராய்ட் செயல்பாடு போன்ற முக்கிய சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என பல மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
சந்தையில் தர்பூசணி வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் பரிசோதனை செய்து பார்த்தாலே தெரிந்துவிடும்.
தர்பூசணியில் 95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கோடை காலத்தில் இந்தப் பழத்தை சாப்பிடுவது நல்லது.
தர்பூசணிகளை வாங்கும்போது கவனமுடன் இருக்கவும்.
தர்பூசணியில் ஏராளமான சத்துக்கள் இருப்பது நாம் அறிந்ததே.