தக்காளி காய்ச்சல்! அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், அதனோடு சேர்ந்து குழந்தைகள் மத்தியில் தக்காளி காய்ச்சல் பரவலும் வேகமெடுத்துள்ளது.
லேசான தொண்டை வலியுடன் தொடங்கும் இந்த பாதிப்பு ஓரிரு நாளில் காய்ச்சலாகவும், பின் கை, கால் பாதங்களில் கொப்புளம் மற்றும் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுகிறது.
1 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்படும் தக்காளி காய்ச்சல், உடல் முழுவதும் தோன்றும் சிவப்பு நிற கொப்புளங்கள் காணப்படும்.
லான்செட் சுவாச மருத்துவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி , தக்காளி காய்ச்சல் என்பது உயிருக்கு ஆபத்தான தொற்று ஆகும். தக்காளி காய்ச்சல் மிகவும் தொற்றுநோயாக இருந்தாலும், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையின் பொம்மைகள், உணவு, உடைகள் அல்லது வேறு எந்தப் பொருட்களையும் தொற்று இல்லாத குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தக்காளி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 5-7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தோல் எரிச்சல் மற்றும் தடிப்புகளைப் போக்க, சூடான நீர் பஞ்சைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
உடல் வலி மற்றும் காய்ச்சலைப் போக்க ஆன்டிபயாடிக் மருந்துகள், கொப்புளங்களுக்கு மருந்து, வாய் புண்களுக்கு ஜெல்கள் மற்றும் அரிப்புக்கு ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் தோல் வெடிப்புகள் மற்றும் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.