கள்ளச்சாராயம் குடித்தால் உடலில் நடக்கும் அபாயகரமான மாற்றங்கள்!



மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்



அதில் போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும்



எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால்தான் மது வகைகளில் இருக்கக் கூடியது



விஷ சாராயங்களில் மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் இருக்கிறது



மெத்தில் ஆல்கஹால் தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது



தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும்



வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும்



ஓரிரு நிமிடங்களில் மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள்



மெத்தனாலை, அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்