சரியான தூக்கம் இல்லனா என்னாகும் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

நிம்மதியான தூக்கம்

இந்தக் காலத்தில் மக்கள் நிம்மதியாகத் தூங்கும் நேரம் என்பது கணிசமாகக் குறைந்தே வருகிறது

குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்

ஒரு நாளுக்கு 14 அல்லது 16 மணி நேரம் கூட ஆக்டிவாக இருக்கலாம். ஆனால், குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்

கண் எரிச்சல்

நாம் 2 நாட்கள் முறையாகத் தூங்கவில்லை என்றாலே நமக்கு ஒரு வித எரிச்சல் ஏற்படுவதை கவனித்து இருப்போம்

சாத்தியமே இல்லாத ஒன்று

தூக்கத்தைக் குறைத்து உடலை அதற்கு ஏற்றவாறு பழக்கப்படுத்துவது கிட்டதட்ட சாத்தியமே இல்லாத ஒன்றாகும்

இதய நோய்

நாம் நிலையாக ஒரே நேரத்தில் தூங்கவில்லை என்றால் அது நமது இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கும்

எதிர்ப்புச் சக்தியும் குறையும்

உடலின் எதிர்ப்புச் சக்தியும் குறையும். இப்படிக் குறைவான நேரம் தூங்கினால் பல வித பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது

குழந்தையின்மை பிரச்சினை

குறைவான தூக்கம் என்பது குழந்தையின்மை பிரச்சினையைக் கூட ஏற்படுத்தும். தினசரி ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு 15% குறைகிறது

விந்தணு எண்ணிக்கை

6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை, விந்தணு மூவ்மெண்ட் குறைகிறது

மருத்துவர் ஆலோசனை

தூக்கத்தில் பிரச்சினை இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்