பாலை லாக்டிக் அமில பாக்டீரியா பயன்படுத்தி நொதிக்க வைத்தால் தயிர் உருவாகும். இந்த பாக்டீரியா பாலில் காணப்படும் கேசின் என்ற புரதத்துடன் ரியாக்ட் செய்யும் போது பால், தயிராக மாறுகிறது
யோகர்ட்டை தயாரிக்க லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் என இரண்டு வகையான பாக்டீரியாக்கள் பாலுடன் சேர்க்கப்படுகிறது
தயிரின் பதம் மிருதுவாக இருக்க யோகர்ட்டின் பதம் சற்று கெட்டியாக இருக்கும். சுவையை பொருத்தவரை தயிரை விட யோகர்ட்டில்தான் புளிப்பு சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும்
தயிர் நொதிக்கும் போது பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், யோகர்ட் கட்டுப்பாட்டுடன்தான் நொதிக்க வைக்கப்படுகிறது
தயிரிலும் யோகர்ட்டிலும் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. தயிரில் கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி12, பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளன
யோகர்ட்டில் தயிரில் உள்ள அனைத்து சத்துக்களும் உள்ளன. ஆனால், கலோரியும் கொழுப்பும் தயிரை விட இதில் குறைவாகவே உள்ளது
தயிரில் யோகர்ட்டை விட அதிக அளவிலான லாக்டோஸ் இருக்க, பாலை விட குறைவான லாக்டோஸ் உள்ளது
தயிர் சாதத்தில் தொடங்கி வட இந்தியாவில் கிடைக்கும் சிற்றுண்டி வரை தயிரை பல விதமாக பயன்படுத்தலாம். யோகர்ட்டை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியாகவோ இனிப்பு வகை உணவுகளுடனோ சாப்பிடலாம்