காலையில் எழுந்ததும் இதை பண்ணுங்க? நிபுணர் பரிந்துரை!
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மிதமான சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம். இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானத்துக்கு உதவும். வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சீரக நீர்
சீரகம் ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும்,
இரவில் தண்ணீரில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால்,ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யும்.
க்ரீன் டீ மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி நிறைந்தது. இது குடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
கொதிக்கும் தண்ணீரில் இஞ்சி தட்டிப் போட்டு, நன்றாக கொதித்ததும் வடிக்கட்டி தேன் கலந்து குடிக்கலாம்.
கற்றாழை சாறு குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும். நச்சுகளை வெளியேற்றும்.
சியா விதைகள் ஒமேகா-3 , நார்ச்சத்து ஆகியவை அடங்கியது. இது உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக இருக்க உதவும்.
இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதுவாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையை பெறுவது நல்லது.