சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது?
Published by: பிரியதர்ஷினி
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை கண்டுக்கொள்ளவில்லை என்றால், பெரும் பிரச்சினை ஏற்படலாம்
நாள் ஒன்றுக்கு இரண்டு முறை, வெதுவெதுப்பான நீரை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தை கழுவவும்
ஜீன்ஸ் போன்ற இறுக்கமான பேண்ட் வகைகளை அணிய வேண்டாம்
சிறுநீர் கழிப்பது போன்ற எண்ணம் வந்தால், உடனடியாக கழிப்பறைக்கு செல்லவும். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர்ப்பையில் பாக்டீரியாக்கள் வளரும்
தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை சுத்தமாகும். மேலும், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் குறையும்
இது போன்ற சமயத்தில் காஃபின் கொண்ட காஃபி, குளிர் பானங்கள், மது, காரமான உணவுகள், அமிலத்தன்மை கொண்ட உணவுகள், செயற்கையான சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள கூடாது
சுத்தமின்மை காரணமாகவும், சுத்தமற்ற பொதுக்கழிவறையில் சிறுநீர் கழிப்பதாலும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்