சைலன்ட் ஹார்ட் அட்டாக்.. இதை பற்றி கேள்விப்பட்டது உண்டா?

Published by: விஜய் ராஜேந்திரன்

நவீன காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது

மாரடைப்பின் சில அறிகுறிகளை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தாலும், அது இளம் தலைமுறையினரை அமைதியான முறையில் தாக்கலாம்

சைலன்ட் ஹார்ட் அட்டாக்கில் வழக்கமான மாரடைப்பு போல், நெஞ்சு வலி ஏற்படாது

உடலில் ஏற்படும் சின்னச்சின்ன அறிகுறிகளுக்கும் நாம் கவனம் கொடுக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்

காரணமே இல்லாமல் தொடர்ச்சியாக களைப்பாக, சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், அது சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக கூட இருக்கலாம்

பலவீனமான இதயம், ஆற்றலை உடலில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்வதால் இவ்வாறு களைப்பு உண்டாகிறது

மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், அது சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக இருக்கலாம்

தொடர்ச்சியான குமட்டல், தலைவலி அல்லது தலைச்சுற்றல் மற்றொரு முக்கியமான அறிகுறி ஆகும்

ஓய்விலும் கூட வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வந்தால், இதயத்தில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது

இவற்றில் எந்த அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்