வாழை இலையில் சாப்பிடுவது, உணவில் பாரம்பரிய உணர்வை சேர்க்கிறது
இது பார்வைக்கு இனிமையான அனுபவத்தை உருவாக்கி, ஒரு விதமான திருப்தியை கொடுக்கும்
டிஸ்போசபிள் தட்டுகளுக்கு இயற்கையான மாற்றாக வாழை இலைகளைப் பயன்படுத்துவது சுற்று சூழலுக்கு நல்லது. இது பிளாஸ்டிக் தட்டுகளின் தேவையை குறைக்கிறது
வாழை இலையில் சாப்பிட்டால் உணவின் சுவை அதிகரிக்கும். வெறும் தட்டில் இருக்கும் உணவின் சுவை, வாழை இலையில் வைக்கும் போது அதிகரிக்கும்
வாழை இலையில் பாலிபினால்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாழை இலையில் உணவை வைக்கும்போது, உணவின் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது
வாழை இலையில் இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, அவை உணவில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றன
தினமும் வாழையிலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், சுலபத்தில் நோய் ஏற்படாத தன்மையும் உருவாகும்