சருமம் சுருங்குவதால் சருமம் மந்தமாகவும், வயதானதாகவும், தேய்ந்து போனதாகவும் தோற்றமளிக்கும்.
மாசுபாடு, வெயிலால் ஏற்படும் பாதிப்பு, ஆரோக்கியமற்ற உணவு முறை,ஆகியவையால் சருமம் பாதிக்கப்படும்.
கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்குவதைத் தவிர, ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கற்றாழை ஜெல்லில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் சருமத்தின் வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது.
இறந்த தோல் செல்கள் அகற்றி புதிய செல்களை உருவாக்க உதவும்.
கற்றாழையுடன் மஞ்சள் சேர்த்து சருமத்தில் பூசினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
மஞ்சள்,சருமத்திற்கு நல்ல கிருமி நாசினியாக செயல்படுகிறது.