தற்போதைய காலத்தில் பிஸியான வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்படுகிறது
உலகில் சுமார் 70 மில்லியன் மக்கள் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 முதல் 50 சதவீதம் ஆண்கள் மலட்டுத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள்
தினமும் குறைந்தது 75 கிராம் வால்நட் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
வால்நட்ஸ் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விந்தணுக்களின் செயல்திறனையும் அதிகரிக்க உதவும்
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வால்நட்டை சாப்பிட வேண்டும்.ஒரு சில நாட்கள் மட்டும் சாப்பிட்டு விட்டுவிட்டால் அது பலனளிக்காது
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை அனைத்தும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன
வால்நட் சாப்பிட்ட ஆண்களுக்கு விந்தணு ஆரோக்கியமாக இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது
வால்நட்ஸ் உடலில் புரதத்தின் அளவை அதிகரித்து கலோரி அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உங்கள் சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் வால்நட் உதவுகிறது