'Mayonnaise' ஆரோக்கியமானதா? தமிழ்நாட்டில் தடைக்கு காரணம் என்ன?

Published by: ஜான்சி ராணி

தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு உணவுகளுக்கான ஸைடிஸ்களில் ஒன்று மையோனைஸ். அதுவும் சிலர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மையோனைஸ் கொடுங்க என்று கேட்பம் நடக்கும்.

சமைக்கப்படாத முட்டை, எண்ணெய், வினிகர் காரத்திற்கு மசாலா பொருட்கள் சேர்ந்து தயாரிக்கப்படுகிறது மையோனைஸ்.

மையோனைஸ் தயாரிக்கப்படும்போது அதில் பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவின் மையோனைஸ் சாப்பிட்டு உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை.

இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமைக்கப்படாத முட்டையில் செய்யக்கூடிய மயோனைசை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுத்தக் கடிய ஆபத்து மிக அதிகம் என உணவு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.

மையோனைஸ் அடிக்கடி சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை என்கின்றனர் நிபுணர்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.