பனீரில் கலப்படம் - கண்டறியும் வழிமுறைகள்!

Published by: ஜான்சி ராணி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள் முதல் எல்லாவற்றிலும் பனீரில் கலப்படம் இருப்பதாக உணவு தரக் கட்டுப்பாடு துறை அதிகாரிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.

போலி பனீர் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம்த்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மணம்..

பனீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அதன் வாசனையை கவனிக்கவும். பனீரில் கொஞ்சம் பால் வாசனை இருக்கும். Synthetic பனீர்-ல் ஒரிஜினல் பனீர் மணம் இருக்காது.

பனீர் 'Texture' கவனிங்க. ஸ்ஃப்டாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் போல பனீர் இருந்தால் அதில் ஸ்டார்ட் அல்லது சிந்தட்டிக் பால் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்கிறார்கள் நிபுணர்கள்.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் கொஞ்சம் இனிப்பு சுவையும் சேர்ந்து இருக்கும். சிந்தட்டிக் பனீர் சற்று கசுப்பு சுவை இருக்கும். அதை கவனிங்க.

ஒரிஜினல் பனீர் சமைக்கும்போது ஸ்சாஃப்ட் ஆக மாறும். தண்ணீர் ஏதும் வராது. இது இல்லை என்றால் சிந்தட்டிக் பனீர் என்பதை கண்டறியலாம்.

பனீரை உடைத்துப் பாருங்க. ஒரிஜினல் பனீரை உடைத்தால் சிறு சிறு ஸ்பாஞ்ச் ஆக கிடைக்கும். ஆனால், சிந்தட்டிக் பனீர் மாவு போல இருக்கும்.

கொதிக்கும் நீரில் ஒரிஜினல் பனீரை போட்டால் அது மூழ்கிவிடும். இதுவே சிந்தட்டிக் பனீரை சேர்ந்தால் அது மிதக்கும், அதோடு, ஸ்லைமியாக மாறிவிடும்.

பனீரை தீயிலிட்டால் அதிலிருந்து பால் வாசனை வரவேண்டும். பிளாஸ்டிக் போல வாசனை வர கூடாது. கவனமுடன் உணவுகளை சாப்பிடுங்க.