வீட்டிலேயே பனீர் தயாரிப்பது எப்படி?
வீட்டிலேயே பனீர் தயாரிக்க தேவையான அளவு பால் எடுத்துக்கொள்ளவும். அதை அடி கனமாக இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள புதிய பாலை பயன்படுத்தவும்
எலுமிச்சை சாறு அல்லது வினிகர் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும். எலுமிச்சை பயன்படுத்துவதால் பனீர் புளிப்பு சுவை தரும்.எனவே பனீரை நன்றாகக் கழுவ வேண்டும்.
பால் கொதித்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கி, 2 தேக்கரண்டி வினிகர் அல்லது 1/4 கப் தயிர் சேர்த்து 1 நிமிடம் வரை நன்றாகக் கிளறி விட வேண்டும். எப்போதும் எலுமிச்சை சாறு, வினிகர் அல்லது தயிர் போன்ற அமிலப் மூலப்பொருளை பால் கொதித்த பிறகுதான் சேர்க்க வேண்டும்.
ஒரு பெரிய கிண்ணத்தின் மேல் ஒரு வடிகட்டி வைத்து, அதன் மேல் சுத்தமான சீஸ் துணி அல்லது மஸ்லின் துணியை பயன்படுத்தி திரிந்த பாலை வடிகட்டவும். பனீர் செட் செய்யும் டப்பா கடைகளில் கிடைக்கிறது.
பனீர் செட் செய்யும் முன்பு,அதன் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும். அதிகப்படியான தண்ணீரை பிழிந்து, இறுக ஒரு முடிச்சை போட்டு 30 நிமிடங்கள் வரை தொங்கவிடவும். பனீர் வடிகட்டிய பிறகும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
பனீர் கிடைக்க குறைந்தது 2.5 முதல் 3 கிலோ எடையுள்ள ஒரு கனமான பொருளை சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை அதன் மேல் வைக்கவும்.
பிறகு துணியிலிருந்து பனீரை தனியாக எடுத்து, சதுரங்களாக நறுக்கிப் பயன்படுத்தி கொள்ளலாம்.
தேவையான நேரங்களிலும் தயாரித்துகொள்ளலாம். ஃபிரிட்ஜ்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.