சர்க்கரை நோய் இருப்பதை கண்டறிய உதவும் அறிகுறிகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், சிறுநீரகங்கள் அதிகப்படியான குளுக்கோஸை சிறுநீர் மூலம் வெளியேற்றும், இதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உடல் செல்களுக்கு குளுக்கோஸ் சரியாக கிடைக்காததால் அளவுக்கு அதிகமாக பசி எடுக்கும், ஏனெனில் இன்சுலின் திறம்பட வேலை செய்யாது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சர்க்கரை நோய் டைப் 1 அல்லது டைப் 2 தீவிரமாக இருக்கும்போது எடை குறைந்துவிடும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சர்க்கரை செல்களை அடையாததால் உடல் ஆற்றலை இழந்து எப்போதும் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தோல் வறண்டு போதல் அரிப்பு அடிக்கடி தொற்று ஏற்படுவதுடன் காயங்கள் மெதுவாக ஆறும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உயர் இரத்த சர்க்கரை அளவு கண் லென்ஸை பாதிக்கும், இதன் விளைவாக பார்வை மங்கலாக மாறும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கைகளில், கால்களில் கூச்சம், மரத்துப்போதல் அல்லது வலி ஏற்படும். இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சிறுநீர் பாதை தொற்றுகள் போன்றவை ஏற்படும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் இரத்த சர்க்கரை பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்