ஆரோக்கியமான சியா சீட்ஸை சாப்பிட சில டிப்ஸ்!
சியா விதைகள் ஒமேகா-3, இரும்புச்சத்து, புரதம் நிறைந்தது.
செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சியா விதைகளை தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம். எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து டீடாக்ஸ் டிரிங்காக குடிக்கலாம்.
ஸ்மூத்தி, மில்க்ஷேக் ஆகியவற்றில் சியா விதைகளை சேர்க்கலாம்.
பழங்கள், காய்கள் சாலட் செய்யும்போது அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் சியா விதைகள் சேர்க்கலாம்.
ஓட்ஸ், சிறுதானிய சத்துமாவு கஞ்சி ஆகியவற்றிலும் சியா விதைகளை சேர்க்கலாம்.
சத்துமாவு உருண்டைகளில் சியா விதைகளை சேர்ப்பதும் ஆரோக்கியமானது.
சியா புட்டிங் செய்து காலை உணவாக சாப்பிடலாம்.
சியா விதைகளை தினமும் உனவில் சேர்ப்பது நல்லது.