இது தெரிஞ்சா இனி காஃபி பக்கமே போக மாட்டீங்க!

Published by: பிரியதர்ஷினி

ஒரு நாளில் 5 கோப்பைகளுக்கு மேல் காஃபி உட்கொள்வது என்பது, கவலை, மனச்சோர்வு, அமைதியின்மை, குமட்டல் போன்ற பல தேவையற்ற பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்

எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் அதிகரிக்கலாம்

அதிகமாக காபி குடிப்பதனால் பெண்களிடையே கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது

தினசரி அதிகப்படியான கஃபைன் உட்கொள்ளும் பெண்களுக்கு ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக நோய் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்

காபியை அதிகமாக குடித்தால் எதிர்காலத்தில் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்

அதிகமாக காபி குடிப்பது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்

வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் அஜீரண கோளாறு ஏற்படலாம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையில் பாதிப்புகள் ஏற்படலாம்