யூரிக் அமில அளவு அதிகமா இருக்கா? குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
Published by: பிரியதர்ஷினி
ப்ளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன. இந்த பெர்ரி பழங்களை காலை நேரத்தில் எடுத்து கொள்வது யூரிக் ஆசிட் அளவை கட்டுப்படுத்த உதவலாம்
காலையில் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது, இது யூரிக் ஆசிட் அளவைக் குறைக்க உதவலாம்
வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன
குறைந்த கொழுப்புள்ள தயிர் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தவும் உதவலாம்
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கவும் உதவலாம்
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடிக்கவும். இது அதிக யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கலாம்
யூரிக் ஆசிட் பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் காலையில் செர்ரி ஜூஸ் அருந்தலாம் அல்லது செர்ரி பழத்தை அப்படியே கூட சாப்பிடலாம்