குளிர்காலத்தில் பலருக்கும் தொண்டை வலி அதிகரிக்கிறது. பருவமழை மாற்றம், ஈரப்பத மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தொண்டை வலி ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு குளிர்காலத்தில் கடுமையான தொண்டை வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.
சளி, இருமல் காரணமாக தொண்டை வலி பலருக்கும் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் பலரும் இருமல் காரணமாக அவதிப்படுவார்கள். இதனால், தொண்டை வறண்டு வலி ஏற்படுகிறது.
தொண்டை வலியை வீட்டில் இருந்தே எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.
வெதுவெதுப்பான நீரில் 2-3 தினசரி உப்பு கலந்து வாயை கொப்பளிக்கலாம். இது கிருமிகளை அழிக்க உதவுகிறது. வீக்கத்தையும் குறைக்கிறது.
வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும். இதனால், தொண்டையின் வறட்சி குறைந்து ஈரப்பதம் அதிகரிக்கும். வைட்டமின் சி -யும் கிடைக்கிறது.
இஞ்சி அருமருந்து ஆகும். இஞ்சி டீ வறண்டு இருக்கும் தொண்டைக்கு இதமாக இருக்கும். சளி, இருமலுக்கு தீர்வாகவும் உள்ளது.
தொண்டை வலி காலத்தில் சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால், வலி மேலும் அதிகரிக்கும்.