வளர்சிதை மாற்றம் உயிரினங்களின் உடலில் நடக்கும் ஒரு வேதி வினை ஆகும். உயிரினங்கள் வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், உடல் அமைப்பை பராமரிப்பதற்கும் மெட்டபாலிசம் உதவுகிறது. ஜிம் சென்று உடலை வருத்திக்கொள்வதற்கு உங்களுக்கு இஷ்டமில்லை என்றால் இயற்கை முறையில் எளிதாக மெட்டபாலிசத்தை அதிகரிக்க 5 டிப்ஸ்... தினசரி உணவுகளை சீராக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும் உணவுகளில் தேவையான அளவு கலோரிகள் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிகவும் தேவையானது. 19-30 வயதிலிருக்கும் பெண்களுக்கு ஒரு நாளுக்கு 2400 கலோரிகள் தேவை. ஆண்களுக்கு 2000-3000 கலோரிகள் தேவைப்படுகிறது டயட்டில் அதிகமான புரதம் எடுத்துக்கொள்வதால் உடலில் வெப்பம் உருவாக்கம் அதிகரித்து தேவையில்லாத கலோரிகளை குறைக்க உதவும். கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேட்டசின் அதிகம் உள்ளதால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன உயிரினங்களுக்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அதிக தண்ணீர் சேர்த்தால் வளர்சிதை மாற்றங்கள் அதிகரித்து உடல் எடை குறையவும் உதவுகிறது