சரும ஆரோக்கியத்திற்கு உதவும் 8 யோகாசனங்கள்!

Published by: ABP NADU

கபால்பதி பிராணயாமா

ஒருவகையான ஆசனம் இல்லையென்றாலும் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி முகம் பளபளவென இருக்க உதவுகிறது

மச்சாசனம்

முகத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைகிறது

அதோ முக ஸ்வானாசனம்

முகத்தில் இருக்கும் கொழுப்புகளை நீக்கி சுருக்கங்களை குறைக்கிறது. இதனால் முகம் நேராகவும் பொலிவுடனும் இருக்கும்

சேது பந்தாசனம்

வயதான தோற்றத்தை மறைக்கும்படி முகத்தை இளமையாக இருக்க வைக்கிறது. தாடை பகுதிகளை இறுக்கி முகத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது

சர்வாங்காசனம்

உடல் தலைகீழாக இருப்பதால் இரத்த் ஓட்டம் சீராக முகத்திற்கு செல்லும். அதனால் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கி முகத்தின் அமைப்பு சீராகி இளமையாக இருக்கும்

உத்தனாசனம்

முகத்திற்கும் உச்சந்தலைக்கும் இரத்தம் சீராக பாயும். மன அழுத்தம் குறைவதால் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும்

புஜங்காசனம்

பின்னோக்கி வளைவதன் மூலம் முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து முகத்தில் அமைப்பு மேம்படும்

தாடாசனம்

மன அழுத்தத்தை குறைத்து உடல் உறுதியாக இருக்க உதவும். அதேபோல முகம் தளர்ந்துபோகாமல் இளமையாக இருக்க உதவும்