தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்கவைக்கும். வெயில் காலத்தில் மிகவும் நல்லது ஆகும்.
தர்பூசணியில் உள்ள சிட்ருலின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து உடலில் செரிமானத்திற்கு பக்கபலமாக மாறுகிறது. இதனால் மலச்சிக்கல் தீர்வு கிட்டும்.
தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி சரும பாதுகாப்பிற்கு பக்கபலமாக உள்ளது.
தர்பூசணியில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் இதய ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது.
கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் இந்த தர்பூசணி பழம் உடல் எடையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாய் சுத்தத்திற்கு தர்பூசணி பழம் முக்கிய பங்காற்றுகிறது. உமிழ்நீர் உற்பத்தியை தூண்டுகிறது. புத்துணர்ச்சியான சுவாசத்தை பராமரிக்க உதவுகிறது.
செல்கள் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது.
இதில் உள்ள மெக்னிசீயம் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால், எலும்பு வலுவாகிறது.