உங்கள் மூட்டுகளை வலுவாகவும் வலியற்றதாகவும் வைத்திருக்க உதவும் 9 எளிய பழக்கங்கள்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

வழக்கமாக உடற்பயிற்சி செய்யுங்கள்

வழக்கமான உடற்பயிற்சி விறைப்பை தளர்த்துகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது. உங்கள் முழங்கால்கள் மற்றும் பிற மூட்டுகளை நன்றாக செயல்பட வைக்கிறது.

Image Source: Canva

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

ஒவ்வொரு கூடுதல் கிலோவும் உங்கள் முழங்கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சிறிய எடை குறைப்பு கூட அழுத்தத்தை குறைக்கிறது, வீக்கத்தை குறைக்கிறது மற்றும் மூட்டுகளை மென்மையாக செயல்பட வைக்கிறது.

Image Source: Canva

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

பழங்கள், காய்கறிகள், மீன் மற்றும் பீன்ஸ் நிறைந்த உணவு உங்கள் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மத்திய தரைக்கடல் வகை உணவு அழற்சியைக் குறைக்கிறது மற்றும் மூட்டுவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

Image Source: Canva

காலணிகளை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்

சரியான காலணிகளை அணிவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மெத்தை போன்ற மற்றும் தாங்கும் தன்மை கொண்ட, ஹீல்ஸ் இல்லாத அல்லது குறைந்த ஹீல்ஸ் கொண்ட காலணிகள், மூட்டு அழுத்தத்தை குறைத்து நல்ல தோரணையை ஆதரிக்கின்றன.

Image Source: Canva

நல்ல தோரனையை பேணவும்

நின்று கொண்டு மற்றும் அமர்ந்து கொண்டு இருக்கும்போது, சரியான நிலையில் இருப்பது உங்கள் மூட்டுகளில் தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்க்கும். வழக்கமான தோரணை, பழக்கவழக்கங்கள் உங்கள் தசைகள், உங்கள் உடலை சிறப்பாக வைத்திருக்க உதவும்.

Image Source: Canva

காயங்களை ஆரம்பத்திலேயே கவனியுங்கள்(ஏதேனும் இருந்தால்)

ஒரு மூட்டு காயமடைந்தால் வீக்கத்தைக் குறைக்கவும் விரைவாக குணமடையவும் RICE முறையைப் பயன்படுத்தவும்: ஓய்வு, குளிர், அழுத்தம் மற்றும் உயர்த்துதல். வலி குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்.

Image Source: Canva

வலியை கவனத்தில் கொள்ளுங்கள்

புதிய அல்லது மோசமான மூட்டு வலியை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இது காயம் அல்லது நோயின் அதிகரிப்பைக் குறிக்கலாம், எனவே கூடுதலான சேதம் ஏற்படுவதற்கு முன் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

Image Source: Canva

புகைப் பழக்கத்தை விடுங்கள்

புகை பிடித்தல் உங்கள் நுரையீரலை பாதிப்பது மட்டுமல்லாமல், மூட்டு சேதம் மற்றும் வலியை மோசமாக்குகிறது. புகை பிடிப்பதை நிறுத்துவது, உங்கள் மூட்டுகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.

Image Source: Canva

உங்கள் எலும்புகளை கவனித்துக் கொள்ளுங்கள்

வலுவான எலும்புகள் ஆரோக்கியமான மூட்டுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகளின் வலிமையைப் பேண, சோடா, காஃபின் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை கட்டுப்படுத்துங்கள்.

Image Source: Canva

மறுப்புரை இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. உங்களுக்கு ஏதேனும் மருத்துவ நிலை குறித்து கேள்விகள் இருந்தால், எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Image Source: Canva