காலையில் எழுந்தவுடன், ஒரு நிமிடம் அமைதியாக உட்கார்ந்து, ஆழமாக மூச்சை இழுத்து வெளியே விடுங்கள். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
உங்களுக்குப் பிடித்த இசையை இரண்டு நிமிடம் கேளுங்கள். இது உங்கள் மனதை உற்சாகப்படுத்தும்.
உடற்பயிற்சி செய்வது மூளைக்கு மிகவும் நல்லது. அதனால், சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடலை ஈரப்பதமாக வைத்திருக்கும், மூளை சரியாக வேலை செய்யும்.
சத்தான காலை உணவை சாப்பிடுங்கள், இது உங்கள் மூளைக்கு தேவையான சக்தியை கொடுக்கும்
அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடுங்கள். இது மன அழுத்தத்தை குறைக்கும்
புத்தகத்தை சிறிது நேரம் படியுங்கள், இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மற்றும் அறிவை வளர்க்கும்
சிறிது நேரம் சூரிய ஒளியில் இருங்கள், இது வைட்டமின் டி-யை வழங்கும் மற்றும் மனநிலையை மேம்படுத்தும்.
இப்படி செய்யுது வந்தால் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்