காலையில் பணிக்குச் செல்பவர்கள் பலரும் தேநீரும், பிஸ்கட் மட்டுமே சாப்பிடுகின்றனர். இது அவர்களது உடல்நலத்தை மிக கடுமையாக பாதிக்கும்.
டோனட்ஸ், சர்க்கரை அதிகம் கொண்ட இனிப்புகள் ஆகியவற்றை காலை உணவாக எடுக்கக்கூடாது. இதில் புரதச்சத்து குறைவாக இருப்பதுடன் விரைவில் பசியை உண்டாக்கும்.
பல வீடு்களில் அவசரத்திற்கு செய்யும் உணவாக உப்புமா உள்ளது. இதில் எந்த சத்தும் கிடையாது. இதனுடன் காய்கறிகள், பன்னீர், பயறு சேர்த்துக்கொண்டால் நல்லது.
சுவையூட்டப்பட்ட ஓட்ஸ் உடல் எடையை குறைப்பதற்காக பலரும் சாப்பிடுகிறார்கள். ஆனால், இது ஊட்டச்சத்து குறைவான உணவாகும். இதில் பழங்கள், நட்ஸ் சேர்த்துக்கொள்வது நல்லது ஆகும்.
காலையில் பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியமற்றது ஆகும்.
கஞ்சியில் சிலர் பால் மற்றும் சேர்த்து குடிப்பார்கள். இதில் புரதச்சத்து குறைவு. சர்க்கரை அதிகம். இதை தவிர்ப்பது நல்லது ஆகும்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திகளில் புரதச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு பதிலாகவே நீங்களே வீட்டில் தயாரித்து சாப்பிடலாம்.
மாலை நேரத்தில் சாப்பிடும் சிற்றுண்டிதான் சான்ட்விச். இதை காலை உணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமற்றது ஆகும். காலையில் புரதச்சத்து நிறைந்த உணவே எடுக்க வேண்டும்.
பழங்களை சாறுகளாக எடுத்துக்கொள்வதை காட்டிலும் பழங்களாகவே சாப்பிடுவதுதான் நல்லது ஆகும். சத்துகள் எல்லாம் சக்கையிலே தேங்கி விடுகிறது. வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பது நல்லது அல்ல.