தசைநார் வலி பிரச்சனையா? சில டிப்ஸ்!
உடலில் உள்ள தசைகளையும், எலும்புகளையும் இணைக்கக்கூடிய நார்த்தன்மையுள்ள இணைப்பு திசுக்களையே 'தசைநார்கள்' என்கிறோம். ஆங்கிலத்தில் 'லிகமென்ட்.
அதிக வலிமையும், அதிர்வை தாங்கும் தன்மையும் கொண்டவை. உடலின் இயக்கத்துக்கு தசைநார்கள் முக்கியமானவை.
சில வேலைகளை செய்யும்போது சரியான தோற்ற நிலையை பின்பற்றாமல் இருந்தால் தசைநார்களில் பாதிப்பு ஏற்படும். இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் அதிக வலி உண்டாகும்.
சில எளிய பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும்.
யோகா விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் குதிகால் இவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
உள்ளங்கைகள் இரண்டையும் இடுப்பிற்கு பக்கவாட்டில் இருக்குமாறு தரையில் பதிக்கவும்.
முழங்கால்களை மடக்கி 5 வினாடிகளுக்கு அப்படியே வைத்திருக்கவும். பின்பு வலது காலை மட்டும் சற்று நீட்டி குதிகால் தரையில் படும்படி வைத்து பாதத்தை மேல்நோக்கி இருக்குமாறு வைக்கவும்
காலை நீட்டி, குதிகாலை நேராக வைத்திருக்கவும். இந்த நிலையில் 5 வினாடிகள் இருந்து, பின்பு உடலை தளர்வாக்கவும் . இவ்வாறு 10 வினாடிகள் இடைவெளியில் இந்த பயிற்சியை தொடர்ந்து 10 முறை செய்யவும்.