உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Canva

ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் வகை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

Image Source: Canva

தினசரி உடற்பயிற்சி

தினசரி வழக்கமாக குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். நடைபயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் ரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம்.

Image Source: Canva

மன அழுத்தத்தைக் குறையுங்கள்

நீண்டகால மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகை செய்யலாம். நேர மேலாண்மை மற்றும் நல்ல சமூக ஆதரவு மூலம் அதை சமாளிக்கவும்.

Image Source: Canva

நல்ல தூக்கம்

குறைந்தது 7-9 மணி நேரம் தூக்கம் அவசியம். போதிய தூக்கமின்மை உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Image Source: Canva

கூடுதல் எடையை குறையுங்கள்

சிறு எடை குறைப்பு கூட ரத்த அழுத்தத்தை குறைக்கும். இடுப்பு அளவை பராமரிக்கவும், ஏனெனில் அதிக வயிற்று கொழுப்பு உயர் ரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும்.

Image Source: Canva

மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள்

மது அருந்துவதை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை உயராமல் தடுக்க முக்கியம்

Image Source: Canva

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

புகைபிடித்தல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதை தவிர்ப்பது ரத்த அழுத்தத்தை இயல்பாக்குவது மட்டுமல்லாமல், இதயத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Image Source: Canva

உப்பு மற்றும் சோடியம் உட்கொள்ளலை கட்டுப்படுத்துங்கள்

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் சோடியம் மற்றும் உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.

Image Source: Canva

ரத்த அழுத்த பரிசோதனை

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பயனளிக்கின்றனவா? என்பதை உறுதிப்படுத்த அவ்வப்போது மருத்துவரை அணுகுங்கள்

Image Source: Canva