கோடைகால சரும பராமரிப்பு!
ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்றவாறு சரும பராமரிப்புகளை மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
கோடை காலத்தில் வெயிலில் செல்பவர்கள் என்றால் சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துவிட்டு கழுவவும். இதோடு கடலை மாவு சேர்க்கலாம்.
கற்றாழை ஜெல் சிறந்த Healing பண்பு கொண்டது. அதை தினமும் பயன்படுத்தலாம். சருமத்தில் ஈரப்பதம் இருக்கவும் உதவும். கற்றாழை மடலை நன்றாக கழுவிட்டு அதிலுள்ள ஜெல்லை பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாறை சருமத்தில் நேரடியாக பயன்படுத்த கூடாது;
ஒரு ஸ்பூன் மஞ்சள், கற்றாழை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவலாம்.
பசும்பாலில் உள்ள லாக்டிக் ஆசிட் (Lactic Acid) தோலை இயற்கையாக பளிச்சிடச் செய்யும்.
கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றை நன்றாக அரைத்து முகத்தில் தடவினாலும் சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.