மாம்பழம் ஃப்ரெஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
கோடை முக்கனிகளின் சீசன். மாம்பழம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மாம்பழத்தை பழுக்க வைக்க, சாப்பிடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை பற்றி காணலாம்.
மாம்பழங்களை வாங்கும்போது கவனித்து வாங்கவும். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டவைகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்கிறார்கள்.
ழுத்த மாம்பழங்களை குளிர் சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை பழுக்கும் செயல்முறையை மெதுவாக்கும். ஒருவாரம் வரை 'பிரெஷ்ஷாக' வைத்திருக்க முடியும்.
காற்றோட்டமான பை அல்லது துளைகள் கொண்ட டப்பாவில் மாம்பழங்களை சேமித்து வைக்க வேண்டும்.
மாங்காய் பழுக்க அதிக நேரம் தேவைப்படும். அப்படி பழுக்காத மாங்காய்களை வீட்டின் அறை வெப்ப நிலையில் வைத்திருந்தாலே போதுமானது. அரிசி டப்பாவில் கூட போட்டுவைக்கும் பழக்கம் இருக்கிறது.
மாம்பழங்கள் பழுக்க நேரடி சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. மாம்பழங்களை விரைவாக பழுக்க வைக்க விரும்பினால். வாழைப்பழம் அல்லது ஆப்பிளுடன் மாம்பழங்களை காகித பையில் ஒன்றாக கட்டி வைக்கவும்.
மாம்பழங்களை துண்டுகளாக நறுக்கிவிட்டால் உடனே சாப்பிட்டு விட வேண்டும். அதனை சிறிது நேரம் கழித்து சாப்பிட விரும்பினால் முறையாக சேமித்து வைக்க வேண்டும்.
வெட்டப்பட்ட மாம்பழ துண்டுகளை காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்ப்பது மாம் பழத்தின் நிறத்தையும், சுவையையும் பாதுகாக்க உதவும்.
கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழங்களை சாப்பிட்டு மகிழுங்கள்!