வால்நட்ஸ் ஊட்டச்சத்து நிறைந்ததுடன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
வைட்டமின்கள், நார்ச்சத்து, மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துகள் வால்நட்ஸில் காணப்படுகிறது.
இதய ஆரோக்கியத்தில் இருந்தும், மூளை பாதுகாப்பிற்கும் தக்க உறுதுணையாக வால்நட்ஸ் உள்ளது.
ஏராளமான நன்மைகள் இருந்தாலும் வால்நட்ஸ் சிலருக்கு ஏற்றது அல்ல.
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் வால்நட்ஸை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள ஆக்ஸலேட்டுகள் இந்த பிரச்சினை இருப்பவர்களுக்கு மேலும் பாதிப்பை உண்டாக்கும்.
வால்நட்ஸில் கலோரிகள் அதிகளவு இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வால்நட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வால்நட்ஸில் நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இது வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினையை உண்டாக்கும்.
யூரிக் அளவு அதிகளவு இருப்பவர்கள் வால்நட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது அந்த பிரச்சினையை அதிகரிக்கும்.
வால்நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. ரத்த உறைதல் தடுக்கும் மருந்துகள் சாப்பிடுபவர்கள் இதை சாப்பிடும்போது அவர்களுக்கு ரத்தப்போக்கு அபாயம் உண்டாகும்.