மாலை வேளையில் யோகா செய்வது ஆரோக்கியமானதா?

Published by: ஜான்சி ராணி

யோகா செய்வது ஆரோக்கியம் தருவதாகும். காலையில் எழுந்ததும் யோகா செய்து தொடங்கலாம்.

யோகாசனத்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. காலையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானது.

ஆனால் பலர் நேரமின்மை போன்ற காரணங்களால் மாலையில் யோகாசனம் செய்கின்றனர்.இது சரிதானா?

இது மன அமைதிக்கும், நல்ல தூக்கத்துக்கும் வழிவகுக்கும்.

நாள் முழுவதுழ் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் மாலை வேளையில் யோகா செய்வது நல்லது. இதன் மூலம் சோர்வு, மன அழுத்தும் நீங்கி ரிலாக்‌ஷாகி தூக்கம் வரும்.

இரவு தூங்குவதற்கு முன்பு, யோகா செய்வது மன அமைதியை ஊக்குவிக்கும். இரவு நேரத்தில் நன்றாக தூங்குவதற்கும் உதவும்,


உங்கள் வேலைகளுக்கு ஏற்றார்போல யோகா செய்யும் நேரத்தை தேர்வு செய்யலாம். ஆனால், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை தவறாமல் செய்வது நல்லது.