மயோனைஸ் வீட்டிலேயே ஆரோக்கியமாக தயாரிப்பது நல்லது. முட்டை சேர்த்து மற்றும் முட்டை சேர்க்காமல் மயோனிஸ் தயாரிக்கலாம். இப்போது முட்டை சேர்த்து செய்வதை காணலாம்.
வேகவைக்காத முட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸ் இ-கோலை போன்ற தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் நிபுர்ணர்கள். அப்படியிருக்க.முட்டையை வேக வைத்து பயன்படுத்த வேண்டும்.
முதலில் வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு இரண்டையும் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளவும். முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே பயன்படுத்தபோகிறோன்.
ஒரு மிக்ஸி ஜாரில் தனியாக எடுத்துவைத்த முட்டையின் வெள்ளைக் கரு, சிறிதளவு எண்ணெய், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள்,,சக்கரை 1/4 டீஸ்பூன் கடுகுப்பொடி சேர்த்து சில நொடிகள் பல்ஸ் Mode-ல் அரைத்து எடுக்க வேண்டும்.
எளிதாக மயோனைஸ் தயார் செய்துவிடலாம்.
இதில் வித்தியாச சுவை வேண்டுமென்றால் புதினா இலை, அல்லது சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்துச் செய்யலாம்.
இதை ப்ரெட் ஆம்லெட், சிக்கன் ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தலாம்.
Salmonella, E Coli ஆகிய பாக்டீரியாக்கள் வேக வைக்காத முட்டையில் இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தினால் உணவு விஷமாக மாறிவிடவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
வேகை வைத்த முட்டை, சிறிதளவு எண்ணெய், மிளகு என மஞ்சள் கருவிலும் இதை செய்யலாம்.