சரியாக தூங்குகிறீர்களா? ஆய்வு சொல்வது என்ன?

Published by: ஜான்சி ராணி

சரியான நேரத்தில் மக்கள் தூங்குகின்ற னரா என்பது பற்றிய ஒரு ஆய்வு, நாடு முழுதும் 10 மெட்ரோ நகரங்களில் நடத் தப்பட்டது.

இந்த ஆய்வில், 63 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடி மொபைல் போனில் வீடியோ பார்க்கின்றனர். 59 சத வீதம் பேர் மொபைல் போனில் உறவினர்கள், நண்பர்களுடன் பேசுகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வரும் 'ஷார்ட்ஸ்' பார்ப்பது, 'ஆப்'களை உபயோகிப்பது என்று 57சதவீதம் பேரும் நேரத் தைப் போக்குகின்றனர். இதனால், 53 சதவீதம் பேருக்கு தூக்கம் தொடர்பான பல உடல் பிரச்னைகள் உள்ளன.

விடுமுறை நாளாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதை பழக்கமாக்க வேண்டும். துாக்கத்திற்கு முதல் எதிரி மொபைல் போன் என்பதை புரிந்து, துாங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னரே மொபைல் பார்ப்பதை தவிர்த்தால், ஆழ்ந்த உறக்கம் வரும்.

இரவு நெருங்கிவிட்டது; துாங்க வேண்டும் என்ற சமிக்ஞையை மூளைக்கு தரும் அளவில் வீட்டில் விளக்குகள் அமைப்பது நல்லது.

படுக்கையில் படுத்தவுடன், 'ஸ்ட்ரெச் சிங்' செய்வது, மூச்சு பயிற்சி, தியானம், துாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, படுக்கை அறையின் வெப்பநிலை 21 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருப்பது நல்லது.

வாசனை எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது, லாவண்டர் போன்ற மென்மை யான வாசனை திரவியங்களை உபயோ கிப்பது ஆழ்ந்து தூங்குவதற்கு உதவும்.

'சர்கார்டியன் ரிதம் என்ற கடிகார அமைப்பு நம் அனைவரின் உடலிலும் இருக்கிறது. துாங்க வேண்டிய நேரத்தில் துாங்காமல் இருப்பது இந்த கடிகார சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கும். இதனால், மயக்கம், சிந்திப்பதில் பிரச்னை ஏற்படலாம்.

நீண்ட நாட்களாக துாக்கமின்மை பிரச்னை இருந்தால், 'அடினோசின்' என்ற வேதிப்பொருள் உடலில் அதிக அளவில் உற்பத்தி ஆகும். இத னால், நினைவுத்திறன் இழப்பு, மன நிலையில் மாற்றம், இதய நாளங்கள் தொடர்பான கோளாறுகள், நச்சுகளை வெளியேற்றும் மூளையின் திறனில் குறைபாடு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.