முட்டை சேர்க்காமல் Mayonnaise தயாரிப்பது எப்படி?
Salmonella, E Coli ஆகிய பாக்டீரியாக்கள் வேக வைக்காத முட்டையில் இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தினால் உணவு விஷமாக மாறிவிடவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டில் ஓராண்டு வரை மையோனைஸ் விற்பனை, தயாரிப்பு ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முட்டை சேர்க்காமல், பனீர் வைத்து மையோனைஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
உங்களுக்கு மையோனைஸ் எவ்வளவு தேவையோ அதற்கு ஏற்ற மாதிரி பனீர் சேர்த்து தயாரிக்கலாம். 100 கிராம் பனீர், காரத்திற்கு ஏற்றார்போல காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெள்ளை மிளகு என சேர்க்கலாம்.
எண்ணெயில் வதக்கிய 6 பல் பூண்டு, 20 கிராம் முந்திரி, தேவையான அளவு உப்பு, 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் இவை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் pulse mode-ல் அரைத்து எடுக்கவும்.
முந்திரிக்கு பதிலாக தோலுரித்த பாதாம், காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாய் என விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம்.
பனீர் மயோனைஸ் உடன் புதினா, கொத்தமல்லி ஆகியவை சேர்த்தால் உங்களுக்கு ஏற்ற ஃப்ளேவர் சேர்க்கலாம்.
பனீர் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். கருப்பு மிளகும் சேர்க்காலம்.
கெட்டித் தயிரை துணியில் தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி எடுக்கவும். இதோடு கூட காரம், உப்பு சேர்த்து Dip-ஆக பயன்படுத்தலாம்..