சிறந்த சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது எப்படி?
கோடைக்காலத்தில் மட்டும் இல்லாமல் எல்லா காலங்களிலுமே சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் நம் சருமத்தில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் எல்லா காலத்திலும் பயன்படுத்துவது நல்லது.
நம் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் சன்ஸ்கிரீனை தேர்வு செய்திட வேண்டும்.
காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இருக்கும் வெயிலில் UV கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் சன்ஸ்க்ரீனை சருமத்தில் அப்ளை செய்துகொள்வது நல்லது என்கிறார்கள்.
சன்ஸ்கிரீனில் SPF PA +++ என்று குறிப்பிட்டிருந்தால், இது அல்ட்ரா வயலட் கதிர் 'ஏ'-ல் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும்.
வறண்ட சருமம் இருக்கிறது என்றால் எண்ணெய் கலந்த SPF பயன்படுத்தலாம்.
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல், அல்லது மேட் ஃபினிஷில் கிடைக்கக்கூடிய சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.
கிரீம், லோஷன், ஃபவுண்டேஷன் கலந்தும்கூட சன்ஸ்கிரீன் கிடைக்கிறது.
சன்ஸ்கிரீனை அப்ளை செய்தவுடன் உடனே வெயிலில் செல்லக் கூடாது.
குறைந்தபட்சம் வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக சன்ஸ்கிரீன் அப்ளை செய்துவிட வேண்டும்.