காற்றைச் சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க இது பக்கபலமாக உள்ளது. இயற்கையான காற்று வடிகாட்டியாக இந்த பாஸ்டன் ஃபெர்ன் செடி உள்ளது. தமிழில் பச்சை ஃபெர்ன் செடி என்றும் கூறுவார்கள்.
இது ஒரு வகை கொடி ஆகும். காற்றில் உள்ள பூஞ்சை மற்றும் நச்சுக்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
காற்றில் உள்ள பென்சீன், ஃபார்மால்டிஹைடை நீக்கும் ஆற்றல் கொண்டது இந்த மூங்கில் பனை. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும்.
குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும் செடி இந்த போத்தோஸ். இது பென்சீன் மற்றும் சைலீன் போன்ற உட்புற நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
ஒரு வகை கற்றாழை போன்று இருப்பது இந்த சிலந்திச் செடி. காற்றைச் சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய அறைகளுக்கு ஏற்றது.
இந்த ரப்பர் செடியில் இலைகள் பெரியதாக இருக்கும். காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடை நீக்கும் திறன் கொண்டது. குறைந்த வெளிச்சத்திலும் வளரும்.
கற்றாழை போன்ற இருக்கும் இது பாம்பு போலவும் இருக்கும். இரவிலும் ஆக்சிஜனை வெளியிடும் ஆற்றல் கொண்டது. பென்சின், பார்மால்டிஹைடை அகற்றும் ஆற்றல் கொண்டது.
காற்றில் உள்ள ஆல்கஹால், அசிட்டோன் மற்றும் ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றை இந்த தாவரம் நீக்குகிறது. வீட்டில் வளர்க்க அழகான தாவரம்