எந்த காலமானாலும் பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் பின்வருவனவற்றை செய்யலாம் வெந்தயம் தேய்த்து குளிக்கலாம் மிளகுத் தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து குளிக்கலாம் தேங்காய் எண்ணெயில் வெந்தயம் காய்ச்சி பயன்படுத்தலாம் பாசிப்பயறு மாவு, தயிர் கலவையை முயற்சிக்கலாம் கற்றாழைச் சாற்றை தலையில் தேய்த்தால் பொடுகு போகும் அருகம்புல் சாறு, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி பயன்படுத்தலாம் வேப்பிலைக் கொழுந்து, துளசி அரைத்து தலையில் தேய்க்கலாம் வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி குளிக்கலாம் பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்