விக்கல் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து உங்களுக்கு தொந்தரவு செய்யலாம்.



பல நேரங்களில் விக்கல் இரண்டு முதல் நான்கு முறை வந்து தானாகவே நின்றுவிடும்.



விக்கல் உணவு காரணமாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே ஏற்படுகிறது.



இதனால்தான் தண்ணீர் குடித்தவுடன் விக்கல் நின்று விடுகிறது.



விக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.



ஒரு துண்டு சிறிய இஞ்சியை வாயில் போட்டு உறிஞ்சி வந்தால் விக்கல் பிரச்சனை குணமாகும்.



ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் விக்கல் பிரச்சனை குணமாகும்.



விக்கல் ஏற்பட்டால், எலுமிச்சைத் துண்டை வாயில் வைத்து உறிஞ்சி வந்தால், பிரச்னை தீரும்.



புதினா இலைகளின் சாறு மற்றும் அரை எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் விக்கல் நிற்கும்.



விக்கல் ஏற்படும்போது, கடுக்காய் பொடியை தலா ஒரு ஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து குடித்தால் சரியாகும்.