செம்மறி ஆடு இறைச்சி மற்றும் வெள்ளாட்டு இறைச்சி, இவ்விரண்டில் எது சிறந்தது, வேறுபாடு என்ன என்பதை இங்கு காணலாம்.



செம்மறி ஆட்டுடன் ஒப்பிடுகையில் வெள்ளாட்டு இறைச்சியில் கலோரிகள் குறைவான அளவில் உள்ளது.



100 கிராம் இறைச்சியில், வெள்ளாட்டு கறியில் 130 கலோரிகளும் செம்மறி ஆட்டுக்கறியில் 300 கலோரிகளும் உள்ளது.



கொழுப்பின் அளவு வெள்ளாட்டு இறைச்சியில் மிக குறைவான அளவில் உள்ளது.வெள்ளாட்டு கறியில் 3 கிராம், செம்மறி ஆட்டுக்கறியில் 20 கிராம் உள்ளது.



மேலும் வெள்ளாடு இறைச்சியில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது.



உடல் இடையில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருந்தால் உங்களுக்கு வெள்ளாட்டு இறைச்சி மிகவும் சிறந்தது.



கொழுப்பு, கொலஸ்ட்ரால், கலோரிகள் குறைவாக உள்ள வெள்ளாட்டு இறைச்சியை அளவான எண்ணையில் சமைத்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு சிறந்தது



அறிவுரை: மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப்