சணல் விதை உடம்புக்கு இவ்வளவு நல்லதா? இதில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு உள்ளிட்டவை நிரம்பியுள்ளன சணல் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், குறிப்பாக ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவலாம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவலாம் சணல் விதைகளில் காணப்படும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் கலவையானது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் சணல் விதைகளில் காணப்படும் காமா-லினோலெனிக் அமிலம் (GLA), ஹார்மோன்களை சமநிலையாக வைத்திருக்க உதவும் அதிக அளவில் உட்கொண்டால் செரிமான பிரச்சினை ஏற்படும் அதனால் இதை பொடியாக்கி அளவாக உட்கொள்ளலாம் ஒவ்வாமை ஏற்பட்டால் இதனை சாப்பிடுவதை தவிர்க்கலாம்