மொச்சக்கொட்டையில இவ்ளோ நல்ல விஷயம் இருக்கா?

Published by: பிரியதர்ஷினி

மொச்சைக் கொட்டை நமது உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவற்றை அதிக அளவில் கொண்டிருக்கிறது

மொச்சை கொட்டை, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைக்கிறது

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபட மொச்சைக் கொட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகிறது

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது

மொச்சைக் கொட்டையில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

டைப்-2 நீரிழிவு நோய்க்கு மொச்சை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது

மொச்சைக் கொட்டை குறைந்த அளவிலான கலோரிகளையும், அதிகளவிலான புரதத்தையும் கொண்டுள்ளதால் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவலாம்