மீல் மேக்கர் சாப்பிட்டால் உடம்பில் இந்த மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? சோயாவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன மீல்மேக்கரில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கலாம் மீல்மேக்கரில் புரதம், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைத் தடுக்கலாம் சோயா துண்டுகள் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்க செய்கிறது மீல் மேக்கரில் காணப்படும் ஐசோ ஃப்ளேவோன்ஸ் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகியவை மனநிலை மாற்றங்கள் போன்ற மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது இருதய நோய்கள் தொடர்பான அபாயத்தைத் தடுக்கலாம் மீல்மேக்கரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் நிறைந்ததாகவும் இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது பின் குறிப்பு : இருப்பினும் மீல் மேக்கரை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்