அதான் பூண்டு இருக்கே..அனைத்து நோய்க்கும் குட் பாய் சொல்லுங்க! பூண்டில் வைட்டமின் பி6 , வைட்டமின் சி , துத்தநாகம் , நார்ச்சத்துக்கள் , கால்சியம் , மெக்னீசியம் , செலினியம் , மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது பூண்டில் உள்ள சத்துக்கள் உங்கள் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது செரிமானம் மற்றும் மாதவிடாய் கோளாறுகள், வலுவற்ற எலும்புகள், மனச்சோர்வு போன்றவற்றையும் பூண்டு சரி செய்யலாம் பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும பிரச்சினைகளை சரி செய்யலாம் பூண்டு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கிறது பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறலாம் இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்களில் ஏற்படும் வலியை சரி செய்கிறது