நிலக்கடலை - வெல்லம் சேர்த்து சாப்பிட்டு பாருங்க.. அப்போ தெரியும் அருமை!

Published by: பிரியதர்ஷினி

வேர்க்கடலை - வெல்லம் காம்போவிற்கு ஒரு தனிப்பட்டாளம் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் வெல்லமும் ஒன்று. வேர்க்கடலையில் கொழுப்பு, புரதம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

வெல்லத்தில் கால்சியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்கள் சிறிய அளவில் உள்ளன

நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். நிறைவான உணர்வை தரும்

ஆரோக்கியமான சர்க்கரை மாற்றாக அறியப்படும் வெல்லத்தை, நெய்யுடன் உட்கொள்ளும்போது, சிறந்த செரிமானத்திற்கு உதவுவதோடு, மலச்சிக்கலையும் குறைக்கும்

வேர்க்கடலையில் பயோட்டின், வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி6 போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை வயிறு வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன

அத்துடன் மாதவிடாயினால் ஏற்படும் எரிச்சலையும் இது கட்டுப்படுத்த உதவுகிறது. வேர்க்கடலையை உண்பது முகப்பரு மற்றும் முடி உதிர்வைத் தடுக்கலாம்

வேர்க்கடலையில் உள்ள அதிக புரதம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உடலின் ஆற்றலை தகுந்தபடி செயல்படுத்த உதவுகிறது

அதில் உள்ள நார்சத்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுது நல்லது=