ஒரே கனியில் இத்தனை சத்துக்களா? பிளம்ஸ் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க! பிளம்ஸ் என்பது ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்த இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த பழமாகும் இந்த பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி2, பி3 மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது வைட்டமின் கே மற்றும் பி6 பிளம்ஸில் ஏராளமாக உள்ளது. வைட்டமின்கள் உங்கள் கண் பார்வை மற்றும் தோலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது பிளம்ஸில் காணப்படும் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் பிளம்ஸை சேர்த்துக்கொள்ளலாம் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பிளம்ஸில் காணப்படுகின்றன, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது, மேலும், இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் ஆபத்துக்களை குறைக்கலாம் பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க பிளம்ஸ் மிகவும் உதவியாக இருக்கலாம்