ஆரோக்கியத்தின் தூதன் துரியன் !

Published by: பிரியதர்ஷினி

துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோய் குணமாகலாம்

துரியன் பழத்தில் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்

இதில் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் ரிபோஃப்ளேவின் அதிகம் நிறைந்துள்ளது

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கலாம்

மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்தது

துரியன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்

துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சத்தால், என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்

துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்

துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவலாம்