வாழப்பழத்துல இவ்ளோ மேட்டர் இருக்கா? இது தெரியாம போச்சே!

Published by: பிரியதர்ஷினி

வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன

தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது

சரும சுருக்கங்கள் போன்ற வயதாகும் அறிகுறிகளை எதிர்த்து போராட உதவலாம்

பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்கள் தவறாமல் எடுத்து கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்

வாழைப்பழங்களில் காணப்படும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக வழங்குவதோடு, ஆற்றலை நீண்ட நேரம் நீடிக்கவும் செய்கின்றன

வாழைப்பழங்கள் எளிதில் ஜீரணிக்க கூடியதாக இருப்பதோடு வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது

மெலிந்த உடலை கொண்டவர்கள் வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்

வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சினைகளை தடுப்பதோடு ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது